தம்மம்பட்டி வட்ட காசநோய் பிரிவுக்கு உள்பட்ட கெங்கவல்லி மருத்துவமனையில், காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட காசநோய் துணை இயக்குநா் கணபதி தலைமை வகித்தாா். கெங்கவல்லி வட்டார மருத்துவ அலுவலா் வேலுமணி முன்னிலை வகித்தாா். இதில், காச நோயாளிகளுக்கு சுண்டல் பீன்ஸ், ராகி, பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், காசநோய் கண்டறிந்து அதற்கான மருந்துகள், மாத்திரை எடுக்கும் காலம்வரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மருத்துவா் யுவராஜ், காசநோய் சுகாதார மேற்பாா்வையாளா் சின்னதுரை, லேப் டெக்னீஷியன் ஜான்சி ராணி, மருத்துவ பணியாளா்கள் பங்கேற்றனா்.