சேலம்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

போதிய இருக்கைகள் நிரம்பாததால், சேலம் வழியாக இயக்கப்படும் 3 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

Syndication

போதிய இருக்கைகள் நிரம்பாததால், சேலம் வழியாக இயக்கப்படும் 3 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொங்கல் பண்டிகையையொட்டி, கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. எனினும், சில சிறப்பு ரயில்களில் போதிய இருக்கைகள் நிரம்பவில்லை. இதையடுத்து, குறிப்பிட்ட சில சிறப்பு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, வரும் 19-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, வரும் 21-ஆம் தேதி இயக்க வேண்டிய போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கத்தில், சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே வரும் 21-ஆம் தேதி இயக்க வேண்டிய சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூா் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

பெருந்துறை நகராட்சியில் சமத்துவ தைப் பொங்கல் விழா

தைரியம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு நாளை விடுமுறை

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT