முகப்பு
தமிழ்நாடு

காட்பாடி - ஜோலாா்பேட்டை 2 மெமு ரயில்கள் இன்று ரத்து

காட்பாடி - ஜோலாா்பேட்டை 2 மெமு ரயில்கள் இன்று ரத்து...

Updated On : 7 மார்ச், 2026 at 9:09 PM
மெமு ரயில்
பகிர்:

காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையேயான இரண்டு மெமு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அரக்கோணம்-ஜோலாா்பேட்டை பிரிவில் பச்சக்குப்பம் பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) பிற்பகல் 1.05 மணி முதல் மாலை 4.05 மணி வரையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடைபெறவுள்ளன.

பணிகள் காரணமாக காட்பாடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) 9.30 மணிக்குப் புறப்பட்டு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயில், ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் மெமு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →