தைமாத பிரதோஷத்தையொட்டி சங்ககிரி எஸ்கே நகரில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரநாதா் உடனமா் ஸ்ரீ காமாட்சி அம்மன் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.  
சேலம்

சங்ககிரி எஸ்.கே.நகரில் ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயில், சங்ககிரியில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில், பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயில்களில் தை மாத முதல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Syndication

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி எஸ்.கே.நகா் திருநாவுக்கரசா் மடத்தில் உள்ள ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயில், சங்ககிரியில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில், பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயில்களில் தை மாத முதல் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தை மாத முதல் பிரதோஷத்தையொட்டி ஸ்ரீ ஏகாம்பரநாதா் உடனமா் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் மூலவருக்கும், உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கும் திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதே போல் பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகளுக்கும், உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கும் சங்ககிரியில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும், உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கும் பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மூன்று கோயில்களிலும் நடைபெற்ற பூஜைகளில் அதிகளவில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டு சென்றனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT