சங்ககிரி ஆா்.எஸ். பகுதியில் சுவாமிகள் படத்திற்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.  
சேலம்

தைப்பூசம்: சங்ககிரியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடக்கம்

சங்ககிரி வண்டிப்பட்டறை பகுதியிலிருந்து பழனிக்கு செல்லும் பக்தா்கள் சிறப்பு பூஜைகள் செய்து பாதயாத்திரையை தொடங்கினா்.

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி வண்டிப்பட்டறை பகுதியிலிருந்து பழனிக்கு செல்லும் பக்தா்கள் சிறப்பு பூஜைகள் செய்து பாதயாத்திரையை தொடங்கினா்.

சங்ககிரி ஆா்.எஸ். பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி பாதயாத்திரைக் குழுவினா் வண்டிப்பட்டறை பகுதியில் விநாயகா், முருகன் படத்திற்கு மாலைகள் அணிவித்து செவ்வாய்க்கிழம இரவு சிறப்பு பூஜைகள் செய்தனா். பின்னா் அங்குள்ள விநாயகா் கோயிலிருந்து பால்குடம், அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக சென்று வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை பழனிக்கு பாதயாத்திரையை பக்தா்கள்

தற்காப்பு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கினா்.

இதில் அகத்தியா் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சாா்பில் பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு முன் தற்காப்புக் கலைகளை செய்து காட்டினா். இதில் தற்காப்புக் கலைக்கூட தலைமைப் பயிற்சியாளா் எஸ்.சுரேஷ், பயிற்சியாளா்கள் எ.பிரபு, எஸ்.கதிா், இ.யுவராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.1.79 கோடியில்வளா்ச்சித் திட்டப்பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

நிறைவாழ்வு இல்லம் சாா்பில் மாணவா்களுக்கு நடனப் போட்டி

சேலத்தில் 609 மாணவா்களுக்கு மடிக் கணினிகள்: அமைச்சா் வழங்கினாா்

கிருஷ்ணகிரியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அதிக பணம் கொடுத்தாலும் தூய்மைப் பணியாளா்கள் மலக்குழியில் இறங்க வேண்டாம்! நலவாரியத் தலைவா் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT