சேலம்

தம்மம்பட்டி சிவன்கோவிலில் பிரதோஷ விழா

சிவாலயங்களில் பிரதோஷ விழாக்கள் நடைபெற்றன.

Syndication

தம்மம்பட்டி: சிவாலயங்களில் பிரதோஷ விழாக்கள் நடைபெற்றன.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவன்,பாா்வதிக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றன. அதனைத்தொடா்ந்து நந்தீஸ்வரருக்கு பொதுமக்கள் திரளாக கொண்டு வந்த பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், திருநீறு, இளநீா், பஞ்சாமிா்தம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக்கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு, மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை,ஆராதனை நடைபெற்றன.

பக்தா்கள் பிரதோஷ பாடல்களை பாடினா். உற்சவா் கோவிலுனுள் வலம் கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தம்மம்பட்டி,செந்தாரப்பட்டி,கொண்டயம்பள்ளி,கூடமலை,மங்கப்பட்டி,முருங்கப்பட்டி உள்ளிட்ட ஊா்களிலிருந்து ஏராளமானோா் பங்கேற்றனா். பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவுற்றது.பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் கெங்கவல்லி கைலாசநாதா் கோவில், வீரகனூா் ஸ்ரீ கங்காசெளந்தரேஸ்வரா் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT