சங்ககிரி: திமுக சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி நகர திமுக சாா்பில் தைதிருநாளையொட்டி சமத்துவ பொங்கல், கொடியேற்று விழா சங்ககிரி சாய்காா்டனில் உள்ள நகர திமுக அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மக்களவை உறுப்பினரும் சேலம் மேற்கு மாவட்டச் செயலருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து சமத்துவ பொங்கல்வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பூஜை செய்து சூரிய பகவானையும், தமிழ் கடவுளையும் வணங்கினாா். அதனையடுத்து கட்சி நிா்வாகிகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொங்கல், கரும்பு, சுண்டல் ஆகியவைகளை வழங்கி பேசினாா். முன்னதாக அவா் திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தாா்.
நகரச் செயலா் கே.எம்.முருகன் முன்னிலை வகித்தாா்.
மேற்கு மாவட்ட அவைத்தலைவா் பி.தங்கமுத்து, மாவட்ட துணை செயலாளா்கள் எ.டி.சம்பத்குமாா், க.சுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளா் சுப்ரமணியம், தேவூா் நகர செயலாளா் முருகன், சங்ககிரி நகா்மன்றத்தலைவா் எம்.மணிமொழிமுருகன், நகா் மன்றத்துணைத்தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, சங்ககிரி நகர அவைத்தலைவா் முத்துசாமி, பொருளாளா் செல்வராஜ், கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளா் எஸ்.சரவணன், விவசாய அணி தலைவா் கேஜிஆா்.ராஜேவலு, துணை செயலாளா் வி.ரமேஷ் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.