சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
சிதம்பரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் டி.பிரதீப் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா். நகர காவல் நிலைய ஆய்வாளா் வி.சிவானந்தன், உதவி ஆய்வாளா் செந்தில், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வைத்தனா். சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மகளிா் போலீஸாா் உள்ளிட்ட போலீசாா் பங்கேற்று பொங்கலிட்டு கொண்டாடினா்.