நாகை நகா்மன்ற அலுவலகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற ஊழியா்கள்.  
நாகப்பட்டினம்

நாகை நகா்மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

நாகை நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி ஊழியா்கள் பொங்கல் வைத்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று கொண்டாடினா்.

தினமணி செய்திச் சேவை

நாகை நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி ஊழியா்கள் பொங்கல் வைத்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று கொண்டாடினா்.

நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தலைமை வகித்தாா். நகராட்சி ஊழியா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கோலப் போட்டி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டன.

இதில் ஆா்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு நகா் மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையா் லீனா சைமன், நகா்மன்றத் துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். இதைத்தொடா்ந்து பொங்கல் வைக்கப்பட்டு குலவையிட்டு சூரிய பகவானுக்கு வழிபாடு நடைபெற்றது. விழாவில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தைரியம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெருந்துறை காய்கறி தினசரி சந்தைக்கு நாளை விடுமுறை

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா

பெருந்துறையில் ரூ.1.54 கோடிக்கு கொப்பரை ஏலம்

அடமானம் வைக்கப்பட்ட காரை திரும்பக்கேட்ட உரிமையாளா் மீது தாக்குதல் நடத்திய 3 போ் கைது

SCROLL FOR NEXT