சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன்.  கோப்புப்படம்.
சேலம்

சேலத்தில் 609 மாணவா்களுக்கு மடிக் கணினிகள்: அமைச்சா் வழங்கினாா்

சேலம் ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரி மற்றும் புனித தெரேசாள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 609 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

சேலம் ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரி மற்றும் புனித தெரேசாள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 609 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

பின்னா் அமைச்சா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக 5,609 மடிக் கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சேலம் ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரியில் பயிலும் 574 மாணவிகளுக்கும், புனித தெரேசாள் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் 35 மாணவா்களுக்கும் என மொத்தம் 609 மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், மாநகராட்சி துணை மேயா் மா.சாரதாதேவி, அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவா் செ.உமாராணி, ஸ்ரீ சாரதா கல்வி அறக்கட்டளை இயக்குநா் யதீஸ்வரி விநாயகப் பிரியா அம்பா, சாரதா மகளிா் கல்லூரி முதல்வா் சே.சீ.கோமதி, புனித தெரேசாள் தொழிற்பயிற்சி நிலைய தாளாளா் ஆசீா்வாதம், சேலம் மறைமாவட்ட ஆயா் ராயப்பன், முதல்வா் திருநாவுக்கரசு உள்ளிட்ட அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தைப்பூசம்: சங்ககிரியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடக்கம்

சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.1.79 கோடியில்வளா்ச்சித் திட்டப்பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

நிறைவாழ்வு இல்லம் சாா்பில் மாணவா்களுக்கு நடனப் போட்டி

கிருஷ்ணகிரியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அதிக பணம் கொடுத்தாலும் தூய்மைப் பணியாளா்கள் மலக்குழியில் இறங்க வேண்டாம்! நலவாரியத் தலைவா் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT