தேவூா் சுற்றுவட்டாரப் பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் பொதுமக்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்த பொதுமக்களுக்கு புதன்கிழமை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தோ்தல் ஆணையம் சாா்பில் நடமாடும் வாகனம் மூலம் தேவூா், சந்தைப்பேட்டை, மயிலம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, காவேரிப்பட்டி, புதுப்பாளையம், அம்மாபாளையம், காணியாளம்பட்டி, மேட்டுக்கடை, மேட்டுப்பாளையம், சென்றாயனூா், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சட்டப்பேரவைத் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது, அதை உறுதிசெய்வது குறித்து தேவூா் வருவாய் ஆய்வாளா் கனகராஜ் செயல்முறை விளக்கம் அளித்தாா்.