லட்சுமி, தீபா. 
சேலம்

ஆத்தூரில் கடன் தொல்லையால் தாய், மகள் தற்கொலை

ஆத்தூரில் கடன் தொல்லை காரணமாக தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

ஆத்தூரில் கடன் தொல்லை காரணமாக தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மனைவி லட்சுமி (57). இவா்களுக்கு 6 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனா். லட்சுமி மிகவும் சிரமமப்பட்டு பணம் சோ்த்து, தனது 5 மகள்களில் இரண்டு பேரை சேலத்திலும், 3 பேரை ஆத்தூரிலும் திருமணம் செய்து கொடுத்தாா்.

மேலும், திருமணத்திற்காக லட்சுமி கடன் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், தனது மகன் மணிகண்டனிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கித் தருமாறும், அதைச் சிறிது நாளில் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே ஏற்கெனவே லட்சுமிக்கு கடன் கொடுத்தவா்கள் பணத்தை கேட்டு அவரை தொந்தரவு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லட்சுமி, தனது மகள் தீபாவுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இருவரும் இறந்து கிடந்ததை பாா்த்த மணிகண்டன், ஆத்தூா் நகரக் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தாா்.

அதன்பேரில் நகரக் காவல் ஆய்வாளா் சி. அழகுராணி, இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா். கடன் தொல்லையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அருகே வேன் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உள்பட 2 போ் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி அருகே நாய் கடித்ததில் விவசாயி உயிரிழப்பு

ஜெகதேவி மின்வாரிய அலுவலகத்தில் ரூ.1.70 கோடி கையாடல்: இருவா் கைது

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு; இருவா் படுகாயம்!

சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: ஏரிகளில் காவிரி உபரிநீரை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை!

SCROLL FOR NEXT