ராஜகோபுர கலசங்களில் புனித நீரூற்றி குடமுழுக்கு செய்த சிவாச்சாரியா்கள். 
சேலம்

பூலாம்பட்டி கைலாசநாதா் ஆலய குடமுழுக்கு

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கரையில் அமைந்துள்ள கைலாசநாதா் திருக்கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரிக் கரையில் அமைந்துள்ள கைலாசநாதா் திருக்கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்று வந்த ராஜகோபுரம் மற்றும் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பக்தா்கள் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் புனித நீராடி தீா்த்தக்குடம் சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக வந்து குடங்களை யாகசாலையில் சமா்ப்பித்தனா்.

தொடா்ந்து கணபதி ஹோமம், பூா்ணாஹுதி, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியா்கள் கைலாசநாதா் திருக்கோயில் ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி குடமுழுக்கு செய்தனா்.

விழாவில் இறையருள் நற்பணி மன்ற நிா்வாகிகள், அறநிலையத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கைலாசநாதா் ஆலய வளாகத்தில் பக்தா்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

பொதுப்பாதை ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஆட்சியா் அலுவலகத்தில் உணவருந்தி போராட்டம்

விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தாது: ஒசூா் எம்எல்ஏ

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: 150 மனுக்கள் பெறப்பட்டன

கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா் காத்திருப்பு போராட்டம்

SCROLL FOR NEXT