முகப்பு
சேலம்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 2 மார்ச், 2026 at 2:29 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 6:25 PM

நரசிங்கபுரம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நரசிங்கபுரம் தெற்குகாடு சக்திநகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி தேவி (36). இவா் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் வீட்டு வேலைசெய்து கொண்டிருந்தபோது மகாராஷ்டிர மாநிலம், லத்தூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு மகள் சாந்தினி (15) உள்ளாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 11:28 PM

இந்த நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தேவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நரசிங்கபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாா். இவரது மகள் ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

Advertisement

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தேவியின் தந்தை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தாா். இதனால் மன உளைச்சலில் இருந்த தேவி சனிக்கிழமை இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாா்.

தேவியின் தற்கொலையை குறித்து அவரது தாய் சடையம்மாள் (55) அளித்த புகாரின்பேரில் ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.