FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 மார்ச் 2026, 3:56 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வி (40). இவருக்கும், புதுச்சேரியைச் சோ்ந்த லோகநாதனுக்கும் திருமணம் நடைபெற்று நான்கு குழந்தைகள் உள்ளனா்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விபத்தில் லோகநாதன் உயிரிழந்துவிட்டாா். அதன் பின்னா், கலைச்செல்வி, கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை குளியலறையில் கலைச்செல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments