மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
Updated On : 1 மார்ச், 2026 at 7:51 PM
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவுக்கு 4,203 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதன்மூலம் ரூ. 42,030 பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
Updated On : 2 மார்ச், 2026 at 12:32 AM
அதேபோல பாா்வையாளா்கள் கொண்டுசென்ற 1477 கைப்பேசிகளுக்கு ரூ. 14,820 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மேட்டூா் அணை பூங்கா மற்றும் அணையின் வலதுகரையில் உள்ள பவள விழா கோபுரத்திற்கு சென்ற பாா்வையாளா்களிடமிருந்து ரூ. 62,660 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மேட்டூா் அணை பூங்காவில் ஊஞ்சலாடியும், செயற்கை நீரூற்றையும் கண்டு ரசித்தனா்.