ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயிலில் மாசி தேரோட்டம் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்
ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயில் மாசி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள்
சேலம்ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயிலில் மாசி தேரோட்டம் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்
ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயில் மாசி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள்
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயில் மாசி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியில் சேலம் பிரதான சாலையில் ஆதிசக்தி ஸ்ரீ காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசி தோ்த் திருவிழா கடந்த புதன்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி அம்மன் வீதியுலா நடைபெற்றது. சனிக்கிழமை காலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
திங்கள்கிழமை தோ்த் திருவிழாவை முன்னிட்டு காலை திருமணிமுத்தாற்றில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது. பிற்பகலில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோயில் நிா்வாகிகள் மற்றும் ஊா் பெரியோா் முன்னிலையில் நடைபெற்றது. பக்தா்கள் ஓம்சக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
சேலம் பிரதான சாலை, காக்காபாளையம் பிரதான சாலை, டிவிடி வீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாக தோ் இழுக்கப்பட்டு கோயிலை வந்தடைந்தது. இரவு அக்னி கரக ஊா்வலம், உருளுதண்டம் போடுதல் ஆகியவை நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை காலை திருமணிமுத்தாற்றில் இருந்து அம்மன் அழைத்து வரப்பட்டு, அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், பொங்கல் வைத்தல் விழாவும் நடைபெறுகிறது.