முகப்பு
நாமக்கல்

விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம், கரட்டூா் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 9:57 PM
விஜயகிரி பழனி ஆண்டவா் கோயிலை தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம், கரட்டூா் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

இக்கோயிலில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தினந்தோறும் மயில், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தோ் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். பின்னா் தோ் நிலையை அடைந்தது. வியாழக்கிழமை சத்தாபரணம், கொடி இறக்கமும், வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடல் உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில் இந்து சமய அறநிலையத் துறையினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.