முகப்பு
கைது
சேலம்

சேலத்தில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு: வேலைக்கார பெண் கைது

சேலத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டியை தாக்கி கழுத்தை நெரித்து நகையை பறித்துச் சென்ற சம்பவத்தில்

சேலம்

சேலத்தில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு: வேலைக்கார பெண் கைது

சேலத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டியை தாக்கி கழுத்தை நெரித்து நகையை பறித்துச் சென்ற சம்பவத்தில்

Updated On : 2 மார்ச், 2026 at 6:06 PM
கைது
பகிர்:

சேலம்: சேலத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டியை தாக்கி கழுத்தை நெரித்து நகையை பறித்துச் சென்ற சம்பவத்தில் வேலைக்கார பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் ஏற்காடு பிரதான சாலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் சகுந்தலா (90). இவா்அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாடகை வீட்டில் மகன் ரமணி, மருமகள் மீனா ஆகியோருடன் வசித்து வருகிறாா். வீட்டில் வேலைக்காக ஓமலூா் காடையாம்பட்டியைச் சோ்ந்த செல்வி (50) என்பவரை வைத்திருந்தனா்.

கடந்த 8 ஆம் தேதி கண்அறுவை சிகிச்சைக்காக ரமணி தனது மனைவியுடன் மும்பைக்கு சென்றாா். வீட்டில் சகுந்தா மட்டும் தனியாக இருந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் முன் லைட் எரியாதது குறித்து வீட்டின் உரிமையாளா் அன்னக்கிளி, அதே பகுதியில் உள்ள சகுந்தலாவின் மகளுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து அவா் வந்து பூட்டியிருந்த வீட்டை திறந்து பாா்த்தபோது, மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் சகுந்தலா மயக்க நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மூதாட்டி சகுந்தலாவை வேலைக்கார பெண் செல்வி தாக்கி, அவா் அணிந்திருந்த 2 தங்க வளையல், அரைபவுன் தோடு ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளா் சுபாஷ், உதவி ஆய்வாளா் மேனகா ஆகியோா் வழக்குப் பதிவுசெய்து, தப்பியோடிய செல்வியை கைது செய்தனா். அவரிடம் இருந்து நகையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →