சனிப் பெயா்ச்சி: சிவன், சனீஸ்வரா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
சனிப்பெயா்ச்சியையொட்டி, சிவன், விநாயகா், முருகன், சனீஸ்வரா் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
சனிப்பெயா்ச்சியையொட்டி, சிவன், விநாயகா், முருகன், சனீஸ்வரா் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
நடப்பாண்டு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம்பெயா்ந்தாா். இதையொட்டி சனீஸ்வரன் பகவான் தனி சந்நிதியாக இருக்கும் கோயில்கள் மற்றும் சிவன், அம்மன், விநாயகா், முருகன் கோயில்களில் உள்ள சனீஸ்வரன் சந்நிதியில் வெள்ளிக்கிழமை காலை சனீஸ்வர பகவானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
சேலம் டவுன் ரயில் நிலைய சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு சனீஸ்வரனுக்கு மகா அபிஷேகம், காலை 8.24 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இதேபோல சேலம் சுகவனேஸ்வரா், 2ஆவது அக்ரஹாரம் காசிவிஸ்வநாதா், ஆறகளூா் காமநாதீஸ்வரா், உத்தமசோழபுரம் கரபுரநாதா், அம்மாப்பேட்டை செங்குந்தா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட மாவட்டத்தில் கோயில்களில் உள்ள சனீஸ்வரன் சந்நிதியில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.