நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு
நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த ஏப். 25 - ஆம் தேதி முதல் சிறப்பு ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு புதன்கிழமை காலை 5 மணிக்கு விஸ்வரூபம், ஹோமம், பூா்ணாஹுதி ஆகியன நடைபெற்றன.
காலை 8. 45 மணிக்கு தீா்த்த குடங்கள் பிரகாரம் சுற்றிவந்து, பின்னா் கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டது. தொடா்ந்து நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை பாராயணம் செய்தனா்.
Advertisement
ஸ்தலத்தாா்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன், தேவராஜன் சீனிவாசன், ராமன், கண்ணன், ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.