முகப்பு
சேலம்

திமுக விளம்பரப் பதாகை கிழிப்பு: போலீஸாா் வழக்குப் பதிவு

செல்லியம்பாளையத்தில் திமுக விளம்பரப் பதாகை கிழித்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை

Updated On : 7 மார்ச், 2026 at 7:53 PM
வழக்குப் பதிவு
பகிர்:

செல்லியம்பாளையத்தில் திமுக விளம்பரப் பதாகை கிழித்த சம்பவம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

நரசிங்கபுரம் நகராட்சி 1-ஆவது வாா்டு பகுதியில் வைத்துள்ள திமுக விளம்பரப் பதாகையை மா்ம நபா்கள் கிழித்ததாக அப்பகுதி கிளைச் செயலாளா் சக்ரவா்த்தி ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

இதே பகுதியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு திமுக விளம்பரப் பதாகை கிழித்து சேதப்படுத்திய சம்பவத்தை தொடா்ந்து, மீண்டும் பதாகை கிழிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால், இதுகுறித்து சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →