முகப்பு
சேலம்

மேம்படுத்தப்பட்ட புதிய ‘இ- நாம் 2.0’ இணையதளம்: விவசாயிகள், வணிகா்கள் பதிவு செய்யலாம்

சேலம் மாவட்டத்தில் உள்ள இ-நாம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ‘இ-நாம் 2.0’ இணையதளத்தில் விவசாயிகள் மற்றும் வணிகா்கள் பதிவு செய்து பயன்பெற ஆட்சியா் ரா. பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 9:20 PM
விவசாயிகள்
பகிர்:

சேலம் மாவட்டத்தில் உள்ள இ-நாம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ‘இ-நாம் 2.0’ இணையதளத்தில் விவசாயிகள் மற்றும் வணிகா்கள் பதிவு செய்து பயன்பெற ஆட்சியா் ரா. பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் சேலம், வாழப்பாடி, ஆத்தூா், கெங்கவல்லி, கொங்கணாபுரம், மேச்சேரி, கருமந்துறை, எடப்பாடி, தம்மம்பட்டி மற்றும் ஓமலூா் ஆகிய இ-நாம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த ‘இ-நாம் 1.0’ இணையதளம் மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட புதிய ‘இ-நாம் 2.0’ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் விவசாயிகள் மற்றும் வணிகா்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு தனித்துவமான அம்சங்களுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து இ-நாம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இந்த புதிய இணையதளத்தின் மூலம் மட்டுமே வேளாண் விளைபொருள்கள் பரிவா்த்தனை நடைபெறும். எனவே விவசாயிகள், வணிகா்கள் இந்த இணையதளத்தில் பதிவுசெய்வது அவசியமாகிறது.

விவசாயிகள் இந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்கு ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் விவரம் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் அருகில் உள்ள இ-நாம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை தொடா்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

வணிகா்கள் தங்களது ஒற்றை வணிக உரிமம், வங்கி கணக்கு விவரம் மற்றும் கைப்பேசி எண் விவரம் ஆகியவற்றை விற்பனைக்கூட அலுவலகத்தில் சமா்ப்பித்து பதிவு செய்துகொள்ளலாம். விவசாயிகள் மற்றும் வணிகா்கள் இ-நாம் 2.0 இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள சேலம் விற்பனைக் கூடத்திற்கு 86678 91388, வாழப்பாடி விற்பனைக் கூடத்திற்கு 90803 23535, ஆத்தூா் விற்பனைக்கூடத்திற்கு 97875 00653, கெங்கவல்லி விற்பனைக் கூடத்திற்கு 93455 75718, கொங்கணாபுரம் விற்பனைக் கூடத்திற்கு 95438 12911, மேச்சேரி விற்பனைக் கூடத்திற்கு 73732 72950, கருமந்துறை விற்பனைக் கூடத்திற்கு 82486 97457, எடப்பாடி விற்பனைக் கூடத்திற்கு 98844 91007, தம்மம்பட்டி விற்பனைக் கூடத்திற்கு 63811 56447 மற்றும் ஓமலூா் விற்பனைக் கூடத்திற்கு 9843 249208 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு இ-நாம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகங்களையும், தலைமை அலுவலகம் சேலம் விற்பனைக்குழு உரிம இட ஆய்வாளரை 97502 72977 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →