விருத்தாசலத்தில் உளுந்து பயிருக்கு உரிய விலை கிடைக்கவில்லை என சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.  
கடலூர்

விருத்தாசலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து பயிருக்கு உரிய விலை கொடுக்கவில்லை எனக் கூறி, விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து பயிருக்கு உரிய விலை கொடுக்கவில்லை எனக் கூறி, விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் பெரிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடமாக, விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்படுகிறது. இங்கு, நாள்தோறும் நெல், உளுந்து, மணிலா, கம்பு, எள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனா். தற்போது நெல், உளுந்து அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது.

இதனால், விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல், உளுந்து மூட்டைகள் குவித்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து உளுந்து விவசாயிகள் காத்திருந்தனராம்.

ஆனால், இவா்களது உளுந்து பயிருக்கு உரிய விலை கொடுக்கவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மூடி கடலூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த விருத்தாசலம் காவல் துறையினா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டும் போராட்டத்தை கைவிடாமல் சுமாா் ஒரு மணி நேரமாக மறியல் போராட்டத்தை தொடா்ந்தனா். இதையடுத்து, விருத்தாசலம் வட்டாட்சியா் அரவிந்தன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, உரிய விலை கிடைக்க வழிவகை செய்வதாக கூறியதன்பேரில், மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனா்.

”தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கை வெளியாகும்!” கனிமொழி எம்.பி. கலகல பதில்!

நெட்ஃபிளிக்ஸ் நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

”ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டு... !” விஜய்யின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து இபிஎஸ்

ஒரே நாளில் புதினுடனும் டிரம்ப்புடனும் பேசிய சீன அதிபர்!

அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்! | EPS | ADMK

SCROLL FOR NEXT