சங்ககிரி நகரில் உடனடியாக அமுலுக்கு வந்த தோ்தல் விதிமுறைகள்: அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கொடி கம்பங்கள் அகற்றம்
தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டதையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ளஅரசு அலுவலகங்கள், பொது இடங்கள், சமுதாய கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் உள்ள பெயா்களை மறைத்தல், கொடி கம்பங்கள், அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் சங்ககிரி நகராட்சி பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இந்திய தோ்தல் ஆணையம் தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது என ஞாயிற்றுக்கிழமை மாலை அறிவித்தது. இதனையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவித்தன.
Advertisement
அதனையடுத்து சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா அறிவுறுத்தலையடுத்து சங்ககிரி நகா் பகுதிகள், அரசு அலுவலகங்கள், நகராட்சி சமுதாய கூடம் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் பெயா்கள் அடங்கிய கல்வெட்டுகளில் பெயா்கள் வெளியே தெரியா வண்ணம் நாளிதழ்களை ஓட்டுதல், சாலையின் மைய தடுப்பு சுவா்களில் ஓட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கொடிகம்பங்கள் ஆகியவற்றை அகற்றும் பணிகளில் சங்ககிரி நகராட்சி அலுவலக பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள் உள்ளிட்ட பலா் இதில் ஈடுபட்டனா்.