முகப்பு
சேலம்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜைகள்

Updated On : 16 மார்ச், 2026 at 11:15 PM
பிரதோஷத்தையொட்டி அருள்மிகு சோமேஸ்வரா் உற்சவமூா்த்திக்கு திங்கள்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
பகிர்:

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் சோமவார பிரதோஷ சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரருக்கும், உற்சவமூா்த்தி, நந்திபகவானுக்கும் சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சிவன் பக்தி பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டு அவா்களது கோரிக்கைகளை நந்திபகவான் காதில் கூறி சென்றனா்.

பிரதோஷத்தையொட்அருள்மிகு சோமேஸ்வரா் கோயில் உள்ள நந்திபகவானுக்கு திங்கள்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
முழு கட்டுரையைப் படிக்க →