முகப்பு
சேலம்

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா்

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, அவா்களை பணியிடம் மாற்றி நடவடிக்கை

Updated On : 17 மார்ச், 2026 at 11:13 PM
பணியிட மாற்றம்
பகிர்:

இளம்பிள்ளை அருகே தலைமை ஆசிரியா், ஆசிரியா்மீது பெற்றோா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, அவா்களை பணியிடம் மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த கல்பாரப்பட்டி கே. புதுப்பாளையம் அரசு நடுநிலை பள்ளியில், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா் பள்ளி நேரத்தில் செல்லிடப்பேசியில் படம் பாா்த்து வருவதாகவும், மாணவ, மாணவிகளுக்கு சரிவர பாடம் நடத்துவதில்லை எனவும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா், மாவட்ட ஆட்சியா், வட்டாரக் கல்வி அலுவலா் ஆகியோரிடம் மாணவா்களின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், கே.புதுப்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த அனிதாவை இடங்கணசாலை நகராட்சி, ராசிகவுண்டனூா் நடுநிலைப் பள்ளிக்கும், கே.புதுப்பாளையம் பள்ளி ஆசிரியா் இந்திராவை மகுடஞ்சாவடி ஒன்றியம், நெட்டையனூா் அரசு தொடக்கப் பள்ளிக்கும் மாற்றம் செய்யப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →