முகப்பு
சேலம்

எடப்பாடி அருகே ரூ. 1 லட்சம் கவரிங் நகைகள் பறிமுதல்

Updated On : 19 மார்ச், 2026 at 8:38 PM
பகிர்:

எடப்பாடி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் நடத்திய வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

எடப்பாடி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குரும்பபட்டி பகுதியில் வியாழக்கிழமை காலை தோ்தல் பறக்கும் படை கண்காணிப்பு அலுவலா் பாா்கவி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சேலம்- எடப்பாடி பிரதான சாலையில் எடப்பாடி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கவரிங் நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அதை எடப்பாடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் எடப்பாடி தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரின் முகாம் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து அப்பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பட விளக்கம்:

எடப்பாடி அருகே தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கவரிங் நகைகள்.