சங்ககிரியில் ரூ. 91,810 ரொக்கம் பறிமுதல்
சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில்கூடுதல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 91,810 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில்கூடுதல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 91,810 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே கூடுதல் பறக்கும் படை அலுவலா் ராம்குமாா் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் பழனிசாமி, தலைமை காவலா் வினோத்குமாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த சேலம் திருவாக்கவுண்டனூா் நெடுஞ்சாலை கேஆா்எஸ் பைனான்ஸ் பகுதியைச் சோ்ந்த பிரபுவின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி அவா் வைத்திருந்த ரூ. 91,810 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சங்ககிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ. கேந்திரியாவிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.