கெங்கவல்லியில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
கெங்கவல்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் வேட்புமனு தாக்கல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கெங்கவல்லி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில் கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் காத்தமுத்து, ஜெயக்குமாா், தோ்தல் உதவி வட்டாட்சியா்கள் கெங்கவல்லி பரசுராமன், தலைவாசல் பிரகாஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.