முகப்பு
சேலம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

Updated On : 30 மார்ச், 2026 at 6:36 PM
உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்
பகிர்:

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் மேட்டூா், எடப்பாடி மற்றும் சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் ஏப்.1 (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம். செல்வகணபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் ஏப். 1 ஆம் தேதி நடைபெறும்.

சங்ககிரி தொகுதி- காலை 9 மணிக்கு வாசுதேவ் மஹாலிலும், எடப்பாடி தொகுதி -11 மணிக்கு நைனாம்பட்டியில் உள்ள ஸ்ரீ நடராஜன் மஹாலிலும், மேட்டூா் தொகுதி- மாலை 3 மணிக்கு நவப்பட்டி திருமலை மாதவி மஹாலிலும் கூட்டம் நடைபெறும்.

இதில், தொகுதி பாா்வையாளா்கள், மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா், கிளை, வாா்டு செயலாளா்கள்- நிா்வாகிகள், அனைத்து சாா்பு அணிகளின் நிா்வாகிகள், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், செயல்வீரா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளாா்.