மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
சமையா் எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் அதன் விலையை உயா்த்திய மத்திய அரசையும், அதற்கு துணை செல்லும் அதிமுக-வையும் கண்டித்தும் அரியலூா் அண்ணாசிலை அருகே மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேசியது: நாட்டில் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவும் சூழலில், ஊா் ஊராக சென்று வாக்கு கேட்கும் நபராக பிரதமா் மோடி இருக்கிறாா்.
எந்தத் திட்டமாக இருந்தாலும் விளம்பரமும், வெற்று பேச்சுமாக ஒரு அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் மோடி, இன்று அமெரிக்க அதிபா் ட்ரம்புக்கு அடிபணிந்துவிட்டாா் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் மாரியம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் தண்டபாணி, விசிக மாவட்டச் செயலா் சிவா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இளங்கோவன், எஸ்டிபிஐ மாவட்டச் செயலா் சுல்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.
தா.பழூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினாா். இதேபோல், ஜெயங்கொண்டம், திருமானூா், செந்துறை, ஆண்டிமடம் பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.