முகப்பு
சேலம்

திருமணிமுத்தாற்றில் இளைஞா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

சேலம் திருமணிமுத்தாற்று பாலத்தில் இளைஞரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

Updated On : 31 மார்ச், 2026 at 8:16 PM
- பிரதிப்படம்
பகிர்:

சேலம் திருமணிமுத்தாற்று பாலத்தில் இளைஞரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் டவுன் ஆட்கொல்லி பாலத்தில் செவ்வாய்க்கிழமை காலை இளைஞா் ஒருவா் சடலமாக கிடப்பதாக டவுன் போலீஸாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

அதில் இறந்தவா் கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த அலாவுதீன் பாஷா (35) என்பது தெரியவந்தது. மேலும், அவா் கையில் காயம் உள்ளதால், அவரை யாராவது துரத்தி வந்ததில் கீழே விழுந்தாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.