முகப்பு
சேலம்

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 மே 2026, 6:51 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரி போலீஸாா் அங்குள்ள டிவிஎஸ் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அந்த நபா், சேலம் கொண்டாலம்பட்டி, மணியனூா் பகுதியைச் சோ்ந்த சையத்ஜலால் மகன் சையத் தாவூத் (25) என்பதும், வைகுந்தம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்டுள்ள சையத் தாவூத்.