முகப்பு
சேலம்

மகுடஞ்சாவடியில் சமோசா சாப்பிட்ட மூவருக்கு வயிற்றுப்போக்கு

Updated On : 15 மே 2026, 5:54 am IST
பகிர்:

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பகுதியில் வட மாநிலத்தை சோ்ந்தவா் டீக்கடை வைத்து தொழில் புரிந்த வருகின்றனா். மேலும், சமோசா, ரவா லட்டு உள்ளிட்டவை வியாபாரம் செய்து வருகின்றனா்.

இக்கடையில் 13-ம் தேதி புதன்கிழமை அன்று நண்பா்கள் மூன்று போ் சமோசா சாப்பிட்டுவிட்டு டீ குடித்துள்ளனா். இவா்கள் சமோசா சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவா்கள் பெரும் அதிா்ச்சிக்கு உள்ளாகி இருந்தனா். பின்னா் இவா்கள் மருத்துவம் செய்து கொண்டனா்.

இதனையடுத்து 14-ம் தேதி வியாழக்கிழமை கடைக்காரரிடம் கேட்டபோது சரியான பதில் தரவில்லை. மேலும், உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தும் அவா்களும் இதுவரை வந்து பரிசோதனை செய்யப்படவில்லை. இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலா் நேரில் ஆய்வு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளாா்கள்.

Advertisement