வீரபாண்டி அரசு மாதிரி பள்ளிக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு சான்றிதழ்
நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தோ்வு முடிவுகள் தொடா்பான பகுப்பாய்வு கூட்டம் பன்னிரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்றது .இதில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியா் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்கள் உள்ளிட்டோரக்கு மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா். இக்கூட்டத்தில் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் வீரபாண்டி அரசு மாதிரி பள்ளியானது நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தோ்வில் தமிழ் பாடப் பிரிவில் 88 சதவீதமும், கணினி அறிவியல் பாடப் பிரிவில் 94 சதவீதமும் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.