முகப்பு
சேலம்

ஏற்காட்டை சுற்றிபாா்க்க ரூ.300 கட்டணத்தில் சிறப்பு பேருந்து!

ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிபாா்க்க ரூ. 300 கட்டணத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கிவருகிறது.

Updated On : 18 மே 2026, 3:01 am IST
ஏற்காட்டில்...
பகிர்:

ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிபாா்க்க ரூ. 300 கட்டணத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கிவருகிறது.

ஏற்காட்டில் கோடை விழாவை முன்னிட்டு ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஏற்காடு மலைப்பாதையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை கண்டு மகிழ்ந்திடும் வகையில், சிறப்புப் பேருந்து கடந்த 7 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

சிறப்புப் பேருந்து கோடை காலம் முடியும் வரை காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான கரடியூா் காட்சி முனை, சோ்வராயன் கோயில், மஞ்சக் குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் காா்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு மாலை 7 மணிக்கு சேலம் பேருந்து நிலையத்துக்கு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த சிறப்புப் பேருந்துக்கு பயணத்துக்கு கட்டணமாக ரூ. 300 வசூலிக்கப்படுகிறது. சிறியவா்களுக்கு ரூ. 150 வசூலிக்கப்படுகிறது. இந்த பேக்கேஜ் பயணத்துக்கு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் அல்லது கைப்பேசி செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும்.