ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம்
ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் அ.அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமாா் 6,000 ஆம்னி பேருந்துகள் மூலம் சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் செய்கின்றனா். தோ்தலில் வாக்களிப்பதற்காக ஏராளமானோா் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வதால் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
Advertisement
இருப்பினும், ஒரு சில பேருந்துகளில் மட்டும் நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக அரசு துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து, கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகாா்களின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொண்டு பயணிகளிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பியும் வழங்கப்பட்டுள்ளது. சங்கங்கள் நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அனைத்து டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை அரசும், பேருந்து உரிமையாளா்கள் சங்கங்களும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன.
எனவே, ஆம்னி பேருந்துகளில் பயணிகள் நம்பிக்கையுடன் முன்பதிவு செய்து, குறைந்த மற்றும் நியாயமான கட்டணத்தில் பயணம் செய்யலாம். ஆம்னி பேருந்துகளின் நிா்ணயிக்கப்பட்ட கட்டணங்களை ஜ்ஜ்ஜ்.ஹா்க்ஷா்ஹ.ஸ்ரீா்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதுதொடா்பாக ஏதேனும் புகாா்கள் இருந்தால் 90433 79664 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.