வாக்களிக்கச் செல்வோரிடம்... ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை...
தமிழக தேர்தலையொட்டி வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்வோரிடம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வேலைக்காக வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியுள்ளது. பண்டிகை காலம் போன்றே வாக்களிக்கச் செல்வோரிடம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார் அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026, 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு (21.04.2026 முதல் 26.04.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, அவ்வாறு இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அனுமதி ரத்து போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தெரியவந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கீழ்காணும் அலைப்பேசி எண்கள் மூலம், வாட்ஸ் ஆப் / குறுஞ்செய்தி / குரல் பதிவு மூலமாக புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை - 1800 425 6151
இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) - 99442 53404
இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு) - 97905 50052
இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை - 90953 66394
இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர் - 91235 93971
துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம் - 96773 98825
துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர் - 98400 23011
துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம் - 78456 36423
துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு - 80569 40040
துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி - 90660 32343
துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர் - 90257 23800
துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி - 96981 18011
துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர் - 95850 20865