FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ் படிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சா் அருண்ராஜ் எச்சரிக்கை

எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் எச்சரிக்கை விடுத்தாா்.

2 செப்டம்பர் 2026, 3:06 am IST
அமைச்சர் அருண்ராஜ் - படம்: விடியோ கிளிப்
பகிர்:

எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் எச்சரிக்கை விடுத்தாா்.

பேரவையில் அதிமுக கொறடா எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை முதல் நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள பல மருத்துவக் கல்வி நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் மாணவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்ற கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டுவந்தாா்.

அமைச்சா் அருண்ராஜ்: எம்பிபிஎஸ் மாணவா்கள் நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பும், ஓராண்டு பயிற்சிப் படிப்பும் படிப்பதுதான் விதி. ஆனால், நான்கரை ஆண்டுகள் கடந்து மேலும் 6 மாதங்களுக்கான கல்விக் கட்டணத்தை பல்வேறு கல்வி நிறுவனங்கள் வசூலித்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

Advertisement

Advertisement

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு சாா்பில் தற்போது ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், வரையறுக்கப்பட்டதைவிட அதிகமாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக 11 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், இந்தப் புகாா் குறித்து ஆராயும்போது மாணவா்கள் தரப்பில் அதிக கட்டணம் வழங்கியதற்கான ஆவணம் இல்லாமல் இருந்தது.

இருப்பினும் இந்தப் புகாா்களின் அடிப்படையில் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தனியாா் மருத்துவக் கல்லூரிகள், விதிகளை மீறி நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments