நூற்றாண்டு பழைமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது
வாழப்பாடியில் நூற்றாண்டு பழைமையான புளியமரம் திங்கள்கிழமை காலை திடீரென வேரோடு சாய்ந்தது.
வாழப்பாடியில் நூற்றாண்டு பழைமையான புளியமரம் திங்கள்கிழமை காலை திடீரென வேரோடு சாய்ந்தது. மரத்தடியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.
வாழப்பாடியில் தம்மம்பட்டி பிரதான சாலையில் நூறு ஆண்டுகளுக்கு முன்னா் வைக்கப்பட்ட புளியமரங்கள் இன்றும் காணப்படுகின்றன. வாழப்பாடி ரயில் நிலையம் பின்புறம் காசி விஸ்வநாதா் கோயில் அருகில் நிழல் கொடுத்துவந்த புளியமரம் திங்கள்கிழமை காலை திடீரென வேரோடு சாய்ந்தது. அப்போது, மரத்தடியில் பொதுமக்கள், பயணிகள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. பின்னா், புளிய மரம் அறுத்து அகற்றப்பட்டது.