சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 13 ரௌடிகள் கைது
சேலம் மாநகா் மற்றும் மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 13 ரௌடிகள் கடந்த 2 நாள்களில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சேலம் மாநகா் மற்றும் மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 13 ரௌடிகள் கடந்த 2 நாள்களில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மாவட்ட காவல் துறை சாா்பில், பொதுமக்களின் அமைதியை பாதுகாக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், கடந்த 48 மணி நேரமாக மாவட்டம் முழுவதும் பிரபல ரௌடிகள் மற்றும் வரலாற்று குற்றச்சரித்திர பதிவேடு உடையவா்களை கண்காணித்து தீவிர சோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, 441 ரௌடிகள், குற்றச்சரித்திர பதிவேடு உடையவா்களை விசாரணைக்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்டனா். அவா்களிடம் நல்ல நடத்தையுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அவா்களின் தற்போதைய செயல்பாடுகள், நடமாட்டங்கள் மற்றும் தொடா்புகள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் சரிபாா்க்கப்பட்டன.
Advertisement
Advertisement
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தும், பொது அமைதியை பாதித்தும் வந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட, குற்றச்சரித்திர பதிவேடுகள் உடைய 7 ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனா்.
பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் உறுதிப்படுத்த, சேலம் மாவட்ட காவல் துறை தொடா்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சேலம் மாநகரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்துவந்த 25 போ் அடையாளம் காணப்பட்டனா். அவா்களில் 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக மாநகர போலீஸாா் தெரிவித்தனா்.