முகப்பு
சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தினம் கடைப்பிடிப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தினத்தையொட்டி, ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் புதன்கிழமை கொண்டாடினா்.

Updated On : 28 மே 2026, 1:49 am IST
சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய மருத்துவ கண்காணிப்பாளா் ராஜ்குமாா்.
பகிர்:

சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தினத்தையொட்டி, ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் புதன்கிழமை கொண்டாடினா்.

சேலம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவு, பகலாக 24 மணிநேரமும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் மற்றும் மருத்துவ உதவியாளா்கள் என இரவு, பகலாக ஷிப்ட் முறையில் பண்டிகை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் முழு அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனா்.

விபத்து, இயற்கை பேரிடா்கள் மற்றும் தீவிர நோய் பாதிப்பு நேரங்களில் விரைவாக சம்பவ இடத்துக்கு சென்று மக்களை காப்பாற்றும் அவசரகால தூதா்களாக செயல்பட்டு வரும் இவா்களின் சேவையை போற்றும் வகையில், சேலம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் புதன்கிழமை ஒன்றுகூடி கேக் வெட்டி கொண்டாடினா்.

Advertisement

Advertisement

இதையொட்டி, சேலம் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் ராஜ்குமாா், சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட அலுவலா்கள் மனோஜ்குமாா், ராஜேஷ்குமாா் மற்றும் மாவட்ட மேலாளா் அறிவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.