வாலிபால் போட்டி: கீழப்பூங்குடி அணி வெற்றி
சிவகங்கை, ஜன. 8: சிவகங்கை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. அண்ணாநகர் நேரு யுவ கேந்திரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிவகங்க
சிவகங்கை, ஜன. 8: சிவகங்கை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
அண்ணாநகர் நேரு யுவ கேந்திரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிவகங்கை வட்டார இளைஞர் மன்றங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
வாலிபால், 200 மீ. ஓட்டம், 400 மீ. ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
வாலிபால் போட்டியில் கீழப்பூங்குடி விடுதலை இளைஞர் நற்பணி மன்றம் முதல் இடத்தையும், அண்ணாநகர்-பி.எம்.சி.சி. இளைஞர் நற்பணி மன்றம் 2-வது இடத்தையும் பிடித்தன.
பரிசளிப்பு விழாவில் நேரு யுவ கேந்திரா திட்ட அலுவலர் டி.எஸ்.ராஜகுமார் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஜவஹர் தலைமை வகித்தார். வெற்றிபெற்றவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் எம்.எஸ்.கணேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.தியாகபூமி, இ.ஜான், கே.முரளிதரன், ஜே.மோகன்,
தடியப்பன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.தேசிய இளையோர் படை தொண்டர் என்.அஜந்தா குமாரி நன்றி கூறினார்.