முகப்பு
மதுரை

"புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும்'

தேவகோட்டை, ஜன. 8: புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் துறை இயக்குநர் கதிரேசன் தெரிவித்தார். தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

தேவகோட்டை, ஜன. 8: புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் துறை இயக்குநர் கதிரேசன் தெரிவித்தார்.

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் மேளாவில், விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில்  

அவர் பேசியது:

விவசாயிகள் வேளான் அறிவியல் நிலையத்திற்கு சென்று, தற்போது வந்துள்ள நவீன தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் லாபகரமாக  விவசாயம் செய்ய இயலும்.

விவசாயம் என்றால் வழக்கமான நெல் பயிரிடுவது என்பதை மட்டும் செய்யாமல், மற்ற பணப் பயிர்களையும் இங்குள்ள மண் வளத்திற்கு ஏற்ப சாகுபடி செய்ய முன்வர வேண்டும். மீன் வளர்ப்புக்கேற்ற சூழல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

கோழிகளுக்கு கழிச்சல் நோய் வராமல் தடுக்க, தற்போது தீவனத்துடன் மருந்தை அளிக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது. இதை தெரிந்துகொண்டு கோழி வளர்ப்பில் ஈடுபடலாம்.

கல்லூரி, பள்ளிகளில் இதுமாதிரி கருத்தரங்குகள் அடிக்கடி நடத்தப்படவேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் அருகில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று கிராமங்களை தத்தெடுத்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →