முகப்பு
மதுரை

விவசாய தொழில்நுட்ப கருத்தரங்கம்

தேனி, ஜன. 8:÷தேனி, காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் மையத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. ÷இந்தக் கருத்தரங்க

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

தேனி, ஜன. 8:÷தேனி, காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் மையத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

÷இந்தக் கருத்தரங்கிற்கு பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வி.பொன்னுச்சாமி தலைமை வகித்தார். சென்டெக்ட் நிறுவனத்தின் தலைவர் பெ.பச்சைமால் வரவேற்றார். மாவட்ட விவசாய இணை இயக்குநர் செல்லத்துரை முன்னிலை வகித்தார்.

÷தென்னை, மா, முந்திரி மற்றும் கரும்பு சாகுபடியில் கடைப்பிடிக்கப்படும் நவீன தொழில்நுட்பங்கள், அரசுத் திட்ட உதவிகள் ஆகியவை குறித்து பேராசிரியர் ஹென்றி லூயிஸ், வேளாண்மை அறிவியல் துறை செயற்பொறியாளர் ஞானப்பிரகாசம் ஆகியோர் பேசினர்.

÷நபார்டு வங்கி மாவட்ட பொது மேலாளர் மணி, வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் மதன்மோகன், மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.பாண்டியன், சென்டெக்ட் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →