மதுரை

மதுரை மாவட்ட புதிய ஆட்சியர் நாளை பொறுப்பேற்பு?

தினமணி

மதுரை, மார்ச் 20: மதுரை மாவட்டத்துக்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆட்சியர் யு.சகாயம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சி.காமராஜ், ஈரோடு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் யு.சகாயம், மதுரை மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  திங்கள்கிழமை மதுரை வரும் யு.சகாயம், செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

  2001-ல் ஐ.ஏ.எஸ். தகுதி பெற்ற இவர், சிவில் சப்ளை இணை ஆணையர், மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர், 2008-ம் ஆண்டில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் போன்ற பொறுப்புகள் வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT