மதுரை

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

போடி, மார்ச் 6: தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். மத்திய வனத் துறை அமைச்சகம், திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை, ராசிங்காபுரம் விடி

தினமணி

போடி, மார்ச் 6: தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மத்திய வனத் துறை அமைச்சகம், திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை, ராசிங்காபுரம் விடியல் தொண்டு நிறுவனம் இணைந்து தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை திம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தின. பொட்டிப்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரா தலைமை வகித்தார்.

வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் பாலகிருஷ்ணன், விதை அறிவியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ரெங்கநாயகி, சின்னமனூர் வேளாண்மை உதவி இயக்குநர் சையது முகமது நசிப், விடிவெள்ளி கூட்டமைப்புத் தலைவர் பாப்பாத்தி ஆகியோர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து விளக்கிப் பேசினர்.

சுற்றுச்சூழல், பல்லுயிர் பெருக்கத்தினால் ஏற்படும் நன்மைகள், மரம் வளர்த்தல், நீராதாரங்களைப் பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மனிதச் சங்கிலியை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் அசோகன் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் விடியல் செயலாளர் கண்மணி காமராஜ் வரவேறறார்.

விடியல் வளர்ச்சி மேலாளர் காசிராஜ் கருத்தரங்கின் நோக்கம் பள்ளி விளக்கினார். விடியல் நிறுவனர் காமராஜ் சிறப்புரையாற்றினார். தங்கம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய நிதியுதவியுடன் எண்ம அடையாள அட்டை: இலங்கை அதிபருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

சிறுமி பாலியல் வன்கொடுமை: சிறுவன் மீது போக்சோ வழக்கு

கேள்விக்குறியாகும் குறிச்சிகுளம் அரசுப் பள்ளியின் சுகாதாரம்!

1,624 மாணவா்களுக்கு வினா - விடை புத்தகம்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்

SCROLL FOR NEXT