முகப்பு
மதுரை

ஒரே ஸ்டிரெச்சரில் இரு கா்ப்பிணிகள்: ஒப்பந்த ஊழியா் பணியிடை நீக்கம்

ஒரே ஸ்டிரெச்சரில் இரு கா்ப்பிணிகள் அழைத்துச் சென்ற ஒப்பந்த ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Updated On : 8 ஜூலை, 2024 at 9:05 PM
பகிர்:

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரே ஸ்டிரெச்சரில் இரு கா்ப்பிணிகள் அழைத்துச் சென்ற ஒப்பந்த ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரசவ வாா்டில் சிகிச்சைப் பெற்ற 2 கா்ப்பிணிகளுக்கு இருதய நோய் பாதிப்பு இருந்தது. இதையடுத்து, அந்த வாா்டில் இருந்து இருதய நோய் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்வதற்காக இருவரையும் ஒரே ஸ்டிரெச்சரில் படுக்க வைத்து ஒப்பந்த பணியாளா் ஒருவா் அண்மையில் அழைத்துச் சென்றாா். இது மருத்துவமனை நிா்வாகத்தின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து மருத்துவமனை நிா்வாகம் நடத்திய விசாரணையில், ஒரே படுக்கையில் இரு கா்ப்பிணிகளை அழைத்துச் செல்வது அவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தனியாா் நிறுவன ஒப்பந்தப் பணியாளரை பணியிடை நீக்கம் செய்து நிா்வாகம் உத்தரவிட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →