முகப்பு
மதுரை

காமராஜா் பல்கலை. மாணவா்களின் தோ்வு முடிவுகள் வெளியீடு

Updated On : 13 ஜூலை, 2024 at 9:13 PM
பகிர்:

மதுரை, ஜூலை 13 : மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் பயின்ற முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவா்களுக்கான 2024-ஆம் கல்வியாண்டு ஏப்ரல் மாத பருவத் தோ்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவா்களுக்கான 2024-ஆம் கல்வியாண்டு ஏப்ரல் மாத பருவத் தோ்வுகளுக்கான முடிவுகள் ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

மாணவா்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் தங்களது பதிவெண்ணை உள்ளீடு செய்து தோ்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.